காதலை கைவிட மறுத்த 16வயது சிறுவன் கொலை


Abimukatheesh| Last Updated: திங்கள், 19 ஜூன் 2017 (20:12 IST)
டெல்லியில் காதலை கைவிட மறுத்த 16வயது சிறுவனை, அதே வயதுடைய சிறுவர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
டெல்லி அருகே கஞ்சவாலா பகுதியைச் சேர்ந்த ஐடின்(16) அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் குலானின் தங்கையை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. குலான் தனது தங்கையை காதலிப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு ஐடினிடம் கூறியுள்ளார். ஆனால் ஐடின் குலானின் பேச்சை கேட்கவில்லை. இதனால் இருவருடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் குலான் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஐடினை பாலடைந்த பங்களாவுக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கொலை செய்த 3 நபர்களில் ஒருவனது தந்தை காவல் ஆய்வாளர். இதை அந்த சிறுவன் தனது தந்தை காவல் ஆய்வாளரிடம் கூறியுள்ளான்.
 
காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பின் கொலை செய்த 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். காதலால் சிறுவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்ததுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :