Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினமும் உடலுறவு; அடி உதை: 10-ஆம் வகுப்பு மாணவியை துன்புறுத்தும் முறைமாமன்!

தினமும் உடலுறவு; அடி உதை: 10-ஆம் வகுப்பு மாணவியை துன்புறுத்தும் முறைமாமன்!


Caston| Last Modified வியாழன், 12 ஜனவரி 2017 (17:43 IST)
16 வயதான 10-ஆம் வகுப்பு சிறுமியை அவரது முறைமாமன் திருமணம் செய்து தினமும் செக்ஸ் தாக்குதல் செய்து அடித்து உதைத்துள்ளார். மேலும் வரதட்சனை கேட்டும் கொடுமைப்படுத்திய சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது.

 
 
ஐதராபாத்தில் கடந்த வருடம் 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த 16 வயது சிறுமியை 35 வயதான அவரது முறைமாமனுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
 
அந்த நபர் தினமும் அந்த சிறுமியை உடலுறுவுக்கு வற்புறுத்தி அவர் மீது செக்ஸ் தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் அடித்து உதைத்து வரதட்சனை கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அவரை வீட்டை விட்டு அனுப்பி பணம் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டு தான் இங்கு வர வேண்டும் என கூறியுள்ளார் அந்த நபர்.
 
மேலும் தனது செக்ஸ் தேவையை பூர்த்தி செய்யவில்லை எனவும் சிறுமி மீது புகார் அளித்துள்ளார் அவர். ஆனால் சிறுமி தரப்பில் அளித்த புகாரை வாங்க போலீசார் மறுத்ததையடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் அந்த சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
 
இந்நிலையில் இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு சென்றது அங்கு தான் திருமணம் செய்துகொண்ட பெண் மைனர் என்பது தனக்கு தெரியாது எனவும் அவர் இல்லற கடமைகளை சரியாக செய்யவில்லை எனவும் கூறியுள்ளார் சிறுமியின் முறைமாமன். மேலும் சிறுமிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :