வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 8 அக்டோபர் 2016 (13:59 IST)

68 நாள் உண்ணாவிரதம் இருந்த சிறுமி மரணம் : பெற்றோர்கள் மீது வழக்கு

68 நாள் உண்ணாவிரதம் இருந்த சிறுமி மரணம் : பெற்றோர்கள் மீது வழக்கு

தொழிலில் லாபம் ஈட்டுவதற்காக, தனது மகளை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தி, அவளின் மரணத்திற்கு காரணமாக இருந்த பெற்றோரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 

 
ஹைதராபாத் அருகில் உள்ள செகந்திராபாத் பகுதியில் உள்ள பாட்பஜார் எனும் பகுதியில், நகைக்கடை நடத்தி வருபவர் லட்சுமிசந்த் சன்சாதியா. இவரின் தொழிலில் நல்ல முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், சென்னையில் இருக்கும் ஒரு சாமியாரை அவர் சந்தித்துள்ளார். 
 
இதையடுத்து, உங்கள் மகளை 4 மாதம் உண்ணாவிரதம் இருக்க செய்தால், உங்கள் தொழிலில் லாபம் கிட்டும் என்று அவர் கூறியதாக தெரிகிறது. அதன்படி, தங்கள் மகள் ஆராதனா(13) என்ற சிறுமியை உண்ணாவிரதம் இருக்க வைத்துள்ளார். 
 
இதைத் தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் 68 நாள் வரை உண்ணாவிரதம் இருந்த சிறுமி சமீபத்தில் மயங்கி விழுந்தாள். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது கேள்விப்பட்டு அதிர்ச்சியடந்த குழந்தைகள் உரிமை ஆணையம், சிறுமியின் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹைதராபாத் கமிஷனர் அலுவகத்தில் புகார் தெரிவித்துள்ளது. 
 
ஆனால், ஜைனர்களைன் மத சம்பிரதாயப்படி, ‘சந்த்தாரா’ அல்லது  ‘சவ்மாஸா’ எனப்படும் ஜீவசமாதி அடையவே தன் மகள் உண்ணாவிரதம் இருந்ததாகவும், இது எல்லோருக்கும் தெரியும் என்றும் சிறுமியின் தந்தை விளக்கம் அளித்துள்ளார். ஆனால், 8ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை உண்ணாவிரதம் இருக்க வைத்து, அவளை கொலை செய்துள்ளார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.