13 வயது மாணவியை விபச்சாரத்தில் தள்ளிய தாய்: 5 பேருக்கு வலைவீச்சு...

Last Modified புதன், 16 மே 2018 (19:36 IST)
 
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் ஸ்ரீ மூலப்பேரி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. 
 
இங்கு கேரளா மாநிலம் அடூர் பகுதியை சார்ந்த சைகால் சஜி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு புளியறையை சார்ந்த தென்காசியில் பணியாற்றும் போலீஸ்காரர் மாரியப்பன் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இதே இடத்தில் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியை சார்ந்த கிரிஜா என்ற பெண் ஐயப்பன் வசித்து வருகிறார். இவரது 13 வயது மகள் பள்ளி விடுமுறைக்காக அம்மாவோடு கடந்த ஒருமாதமாக தங்கியுள்ளார். 
 
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி மகளை காணவில்லையென புளியரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தென்மலை போலீசார் கிரிஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 
 
அவரே தனது மகளை தனது வீட்டில் வைத்து இரவில் பலருக்கு விருந்தாக்கியதும், மேலும் பல பகுதிகளுக்கு அழைத்து சென்று விருந்தாக்கியதும் தெரியவந்தது.
 
இதனை தொடந்து அந்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமியை சீரழித்த அஜித், ஐயப்பன் உள்ளிட்ட சிலரை தென்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :