1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2015 (01:54 IST)

தானேவில் மிகப்பழமையான கட்டிடம் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 12 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம், தானே நகரில் மிகப்பழைமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
 

 
இது குறித்து, தானே மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி சந்தோஷ் காதம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தானே நகர ரயில் நிலையம் அருகில் சுமார் 50 ஆண்டுகள் பழைமையான கிருஷ்ணா நிவாஸ் என்ற பெயரில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இடிந்து விழுந்தது.
 
இந்தத் தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரர்களும், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தூரிதகதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
 
அப்போது, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்கப்பட்டுள்ளனர் என்றார்.
 
இந்தத் தகவல் அறிந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தாணே மாவட்ட ஆட்சியர் அஸ்வினி ஜோஷி ஆகியோர் மீட்புப் பணிகளை நேரில் சென்று துரிதப்படுத்தினர்.
 
இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.