ஒரே நேரத்தில் 100 சிலிண்டர்கள் வெடித்து விபத்து

fire
Last Modified சனி, 9 ஜூன் 2018 (15:53 IST)
பீகாரில்  ஒரே நேரத்தில் நூற்றுக்கும் அதிகமான சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் பாட்னா நகரில், சுமார் 450 எரிவாயு சிலிண்டர்களை லாரியிலிருந்து குடோனுக்கு இறக்கி வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது லாரியில் இருந்து இறக்கப்பட்ட இரு சிலிண்டர் கைநழுவி தரையில் விழுந்தது.
 
லாரியின் சைலன்ஸர் மீது சிலிண்டர் பட்டதில் சிண்டர் வெடித்து சிதறியது. இதனால் லாரியிலிருந்த நூற்றுக்கும் அதிகமான சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இந்த தீ அருகிலிருந்த ரசாயன ஆலைக்கும் பரவியது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் போராடி தீயை அணைத்தனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :