பலாத்காரம் செய்த மாமாவின் படத்தை வரைந்து கைது செய்ய உதவிய 10 வயது சிறுமி!

பலாத்காரம் செய்த மாமாவின் படத்தை வரைந்து கைது செய்ய உதவிய 10 வயது சிறுமி!


Caston| Last Modified புதன், 14 ஜூன் 2017 (16:13 IST)
டெல்லியில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தனது மாமாவை படமாக வரைந்து கைது செய்ய போலீஸுக்கு உதவியுள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர்.

 
 
கொல்கத்தாவை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் குடும்ப வறுமை காரணமாக டெல்லியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி வந்துள்ளார். ஆனால் அங்கு அத்தையின் கணவர் அந்த சிறுமியை பலமுறை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லி கீழ் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து போலீசார் அதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்து போலீசார் அந்த நபரை தேடி வந்தனர். ஆனால் முடியவில்லை.
 
இதனையடுத்து பலாத்காரம் செய்தவரின் படத்தை வரைந்து கொடுக்க சிறுமியிடம் போலீசார் கூறினார். உடனே சிறுமி அவரது மாமாவின் உருவத்தை வரைந்து கொடுத்தார். அதனை வைத்து போலீசார் அந்த நபரை பிடித்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவரது மாமா இதனை மறுத்துள்ளார். சிறுமி தவறாக வரைந்துள்ளார். பலாத்காரம் செய்தது நான் அல்ல, நான் ஒரு நிரபராதி என்றார். ஆனாலும் அவரை போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :