ராம்தேவ் உண்ணாவிரதம்: அரசு முயற்சி தோல்வி

புதுடெல்லி | Webdunia| Last Modified வெள்ளி, 3 ஜூன் 2011 (19:35 IST)
ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக யோகா குரு ராம்தேவ் நாளை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ள நிலையில், போராட்டத்தை கைவிட வைப்பதற்காக மத்திய அரசு தரப்பில் இன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

ராம்தேவ் அறிவித்துள்ள போராட்டத்தை கைவிட வைப்பதற்காக, மத்திய அமைச்சர் கபில் சிபல்,சுபோத் காந்த் சகாய் ஆகியோர் ராம்தேவை டெல்லியில் அவர் தங்கியிருக்கும் விடுதியில் சந்தித்தனர்.

சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இதனையடுத்து திட்டமிட்டபடி நளை தாம் உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கப்போவதாக ராம்தேவ் அறிவித்தார்.
இருப்பினும் ராம்தேவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கபில் சிபல், இரு தரப்புக்கும் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், பாபா எழுப்பிய பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாக உத்தரவாதம் அளிக்கும் என்றும், ஒரே நாளில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது என்று தாங்கள் பாபாவிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :