மம்தா பானர்ஜி – அன்னா ஹசாரே உறவில் விரிசல்

FILE

பாராளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்கப் போவதாக காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னாஹசாரே கூறியிருந்தார். தனது எல்லா கோரிக்கைகளையும் ஏற்று நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதால் பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜியே தகுதியானவர் என்று அன்னா ஹசாரே அறிவித்தார்.

இதனால் மம்தா பானர்ஜியை ஆதரித்து அன்னா ஹசாரே பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை டெல்லியில் மம்தாவும் பானர்ஜியும், அன்னா ஹசாரேவும் சேர்ந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த கூட்டத்தில் அன்னா ஹசாரே கலந்து கொள்ளவில்லை.

Webdunia|
மம்தா பானர்ஜியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அன்னா ஹசாரே கலந்து கொள்ளாமல் தொடந்து புறக்கணித்து வருவதால் மம்தா - அன்னா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே வரும் 20 ஆம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் அன்னா ஹசாரேயும் மம்தா பானர்ஜியும் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அந்த கூட்டம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் அன்னா ஹசாரே, மம்தா பானர்ஜி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :