தெலங்கானா தனி மாநில மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி

FILE

தெலங்கானா விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் ஊழல் எதிர்ப்பு மசோதா உள்ளிட்ட விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் 4-வது நாளாக இன்றும் முடங்கியது.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கூச்சல் குழப்பம் ஏற்படுத்துவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ள அவர், நாடாளுமன்றம் விவாத களமாக தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Webdunia|
நாடாளுமன்றத்தில் தெலங்கானா தனி மாநில மசோதாவை தாக்கல் செய்ய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடாரை சுமூகமாக நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரணாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்படுத்தி வரும் தெலங்கானா தனி மாநில மசோதாவை தாக்கல் செய்ய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :