சத்திஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் 20 துணை ராணுவப்படையினர் பலி!

Webdunia|
FILE
சத்திஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தின் டோங்பால் பகுதியில் மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் 20 பேர் பலியாகியுள்ளனர்.

மே மாதம் 25ஆம் தேதி டோங்பாலுக்கு அருகே ஜீரம் கதி என்ற இடத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பலியான இடத்திற்கு அருகே இது நடந்துள்ளது.

டோங்பால் பகுதியில் துணை ராணுவப்படையின் 80வது பட்டாலியன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சக்தி வாய்ந்த IED வெடித்தது. பிறகு தாறுமாறாக மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கியால் சுட்டனர்.
இன்று நடந்த தாக்குதலில் 20 பேர் பலியாக 44 பேர் காயமின்றி தப்பியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு காயமடைந்தோரை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பபட்டுள்ளது மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

துவக்க செய்திகளின் படி சுமார் 300 மாவோயிஸ்ட்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :