கொல்கத்தாவில் கற்பழிக்கப்பட்டதை அடுத்து தீக்குளித்த சிறுமி மரணம்; உடலை பெற தந்தை போராட்டம்

Webdunia| Last Modified புதன், 1 ஜனவரி 2014 (12:36 IST)
சிறுமியின் பெற்றோர் அவரது உடலை கேட்டுள்ளனர். ஆனால் போலீசார் உடலையும், இறப்பு சான்றிதழையும் கொடுக்க மறுத்துள்ளனர். சிறுமியின் தந்தை அங்கு டாக்சி ஓட்டி வருகிறார். டாக்சி ஓட்டுநகர்களுடன் சென்று உடலை எடுத்து வர முயன்ற போது போலீசார் தடுத்துள்ளனர். பின்னர் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் அதிகாலை 2:30 மணிக்கு போலீசார் சிறுமியின் உடலை எடுத்து செல்ல அனுமதித்துள்ளனர்.

கற்பழித்தவர்கள் மற்றும் பெண்ணை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று சிறுமியின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து நீதி கிடைக்க போராடுவேன். அவர்களை விட மாட்டேன். அவர்கள் தூக்கில் தொங்கும் வரையில் எனது உயிரை விட மாட்டேன். இது சத்தியம் என்று சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :