கொல்கத்தாவில் கற்பழிக்கப்பட்டதை அடுத்து தீக்குளித்த சிறுமி மரணம்; உடலை பெற தந்தை போராட்டம்

Webdunia| Last Modified புதன், 1 ஜனவரி 2014 (12:36 IST)
FILE
கொல்கத்தா: மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் 16 வயது சிறுமி கடந்த அக்டோம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.

இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர். இந்நிலையில் சிறுமிக்கு தொடர்ந்து அவர்கள் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அப்பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

ஆனால் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவனின் நண்பர்கள் தொடர்ந்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி கடந்த 23ம் தேதி தற்கொலை செய்து கொள்ள தீ வைத்துக் கொண்டார். பின்னர் அவரை காப்பாற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மரணம் அடைந்துவிட்டார்.
இதை தொடர்ந்து...


இதில் மேலும் படிக்கவும் :