ஐபிஎல். விவகாரம்: போலீஸ் அதிகாரி சம்பத் குமா நீக்கம்!

Webdunia|
FILE
ஐ.பி.எல். சூதாட்டம் நடந்ததாக நீதிபதி முட்கல் தலைமையிலான 3 பேர் கமிட்டி விசாரணையை நடத்தியது. இந்த கமிட்டி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

அதில் ஐ.பி.எல். விவகாரம் தொடர்பாக சரியான அளவில் போலீசார் விசாரணை நடத்தவில்லை என்றும், இது தொடர்பாக மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் சென்னையில் பிடிபட்ட தரகர்களிடம் முதலில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய சம்பத்குமார் மீது சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த புகார் குறித்தும் விசாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலீஸ் அதிகாரி சம்பத்குமார் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இவர் ஒரு ஐபிஎஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருச்சி ரெயில்வே போலீஸ் ஸூபிரண்டாக பணியில் இருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :