Widgets Magazine

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 1,706ஆக அதிகரிப்பு

Webdunia| Last Modified திங்கள், 28 மார்ச் 2011 (11:45 IST)
இந்திய நாட்டின் தேசிய விலங்கினமான புலிகள் எண்ணிக்கை 1,706ஆக அதிகரித்துள்ளது. 2006ஆம் ஆண்டு கணக்கீட்டிற்குப் பிறகு புலிகளின் எண்ணிக்கையில் 295 அதிகரித்துள்ளது.

மத்தியச் சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நடத்தும் சர்வதேச புலிகள் மாநாட்டில் இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷிவைக் கங்கைச் சமவெளிகளில் 353 புலிகளும் மத்திய இந்தியா, மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் 601 புலிகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் 534 புலிகளும், வடகிழக்கு மலைப்பகுதிகள் மற்றும் பிரம்மபுத்திரா நதி வெள்ளப்பகுதியில் 148 புலிகளும், சுந்தரவனக்காடுகளில் 70 புலிகளும் உள்ளன.
உலக புலிகள் கூட்டமிப்பின் இணைந்து இந்த புலிகள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

இன்று துவங்கிய இந்த புலிகள் மாநாட்டில் 30 ஆண்டுகளில் இந்தியாவில் புலிகள் பற்றிய சிறிய ஆவணப்படம் ஒன்றையும் திரையிடவுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மொத்த புலிகள் எண்ணிக்கை 3000ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :