Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பீச்சாங்கை - ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ வொர்கவுட் ஆகியிருக்கா?


Abimukatheeesh| Last Updated: வெள்ளி, 16 ஜூன் 2017 (16:07 IST)
‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்ற புது விஷயத்தை எடுத்துக்கொண்டு காமெடி கலந்த கதையை கொடுக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குநர் அஷோக்.

 

 
அறிமுக நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் பிக்பாக்கெட் அடித்து பிழைக்கும் இளைஞர். நாயகன் உள்பட மூவர் சேர்ந்து கூட்டணியாக பிக்பாக்கெட் அடித்து வருகிறார். பின் மூவரும் ஒரு கட்டத்தில் பிரிகிறார்கள். இதையடுத்து நாயகனுக்கு நாயகி அஞ்சலி ராவ் உடன் காதல் ஏற்படுகிறது.
 
முதல் பாதியில் இயக்குநர் ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’  குறித்து விளக்க முயற்சித்து தோல்வி அடைந்துள்ளார். நாயகன் பீச்சாங்கையால் பிளேடு போட்டு பிக்பாக்கெட் அடிப்பதில் விளையாடுகிறது. நாயகன் பிக்பாக்கெட் அடித்தாலும் அவருக்கென்று ஒரு தொழில் தர்மம் வைத்து விளையாடி வருகிறார். பர்ஸில் பணத்தை தவிர வேறு எது இருந்தாலும் அதை உரியவருக்கே அனுப்பி வைக்கிறார். 
 
முதல் பாதியை இரண்டாம் பாதியில் சரிசெய்ய முயற்சித்து இருக்கிறார் இயக்குநர். நாயகன் திருந்த நினைக்கும் போது நாயகனின் ‘பீச்சாங்கை’ சொல்பேச்சு கேட்காமல் போகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள்தான் மீதம் கதை. படத்தில் காதல் காட்சிகள் அழுத்தமாக இல்லை. பாடல்கள் படத்தோடு ஒன்றிணையவில்லை. படத்தில் பெரும்பாலும் புது முகங்கள்தான். நாயகன் கதைக்கு ஏற்ப ஒத்து நடித்துள்ளார். 
 
இசையமைப்பாளர் பாலமுரளி பாலு ஒரு சில இடங்களில் கவனத்தை ஈர்க்கிறார். நாயகன் பீச்சாங்கையை வைத்து சண்டையிடும் காட்சிகளை, ஸ்டண்ட் மாஸ்டர் விமல் ராம்போ அருமையாக அமைத்துள்ளார்.
 
கேமராமேன் கௌதம் ராஜேந்திரன் குறைந்த பட்ஜெட் படம் என்று தெரியாமல் தரமான காட்சிகளை பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில் பீச்சாங்கை படத்தின் நாயகனாக விளையாடி உள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :