வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜூன் 2018 (21:27 IST)

சசிகுமாரின் 'அசுரவதம்' திரைவிமர்சனம்

பலே வெள்ளைத்தேவா, கொடிவீரன் ஆகிய இரண்டு தோல்வி படங்களுக்கு பின் வெளிவந்துள்ள சசிகுமார் படம். இந்த படம் அவரது மார்க்கெட்டை மீண்டும் சுப்பிரமணியபுரம் ரேஞ்சுக்கு உயர்த்தும் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடம் இருந்தது. அந்த நம்பிக்கை ஜெயித்த்தா? அல்லது வீண் போனதா? என்பதை பார்ப்போம்
 
மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வில்லனை சசிகுமார்  அணுஅணுவாக சித்ரவதை செய்து எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை
 
சசிகுமாரின் நடிப்பில் எந்தவித வித்தியாசமும் இல்லை. வில்லனை துரத்தி ஓடுகிறார், நடக்கின்றார், போலீசிடம் சிக்குகிறார், அடி வாங்குகிறார், அடி கொடுக்கின்றார், இறுதியில் வில்லனை கொலை செய்கிறார். இந்த கேரக்டரை செய்ய சசிகுமார் போன்ற திறமையான நடிகர் தேவைதானா?
 
இந்த படத்தின் நாயகி நந்திதா என்று டைட்டில் போடுகிறார்கள். ஆனால் நாயகி இரண்டாம் பாதியில் தான் அறிமுகமாகிறார். பைத்தியமாக ஒருசில நிமிடங்களும், பாசக்கார கணவன் பிரிவதை நினைத்து ஏங்கும் ஒருசில நிமிடங்களும் தான் இவரது கேரக்டர். ஒரு  நல்ல திறமையான நடிகையை கெஸ்ட் ரோல் கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள். 
 
வில்லன் வசுமித்ர நடிப்பு அபாரம். இவர் இனி தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வருவார் என்று நிச்சயம் நம்பலாம்
 
ஒளிப்பதிவு தவிர மற்ற டெக்னீஷியன்கள் பணி திருப்தியை தரவில்லை. பின்னணி இசை படு சொதப்பல்.
 
முதல் பாதி முழுவதும் வில்லனை சசிகுமார் விரட்டுவதும், சசிகுமாரை பார்த்து வில்லன் ஓடுவதுமாக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடும் இந்த ஓட்டம் எப்போது நிற்கும் என்று ஒரு கட்டத்தில் ஆடியன்ஸ்களுக்கே பொறுமை இழக்கின்றது. படத்தில் குறைந்த வசனம் பேசும் சசிகுமார், நடிப்பிலும் அதே விதத்தைதான் கொடுத்துள்ளார். வில்லனை அவர் எதற்காக விரட்டுகிறார் என்பது நந்திதா கேரக்டர் அறிமுகமானவுடன் ஓரளவு புரிந்துவிடுகிறது.
 
வில்லனை பழிவாங்குவதில், மிரட்டுவதில் எந்தவித புத்திசாலித்தனும் இல்லை என்பதே இந்த படத்தின் மிகப்பெரிய ஓட்டை. கடைசி பத்து நிமிடங்களில் வரும் பிளாஷ்பேக்கில் வில்லனை பழிவாங்குவதன் நோக்கம் விளக்கப்பட்டாலும் அந்த பத்து நிமிட காட்சிகளுக்காக ஒன்றரை மணி நேரம் கொடுமையை ஆடியன்ஸ் அனுபவிக்க வேண்டுமா? இயக்குனர் மருதுபாண்டியன் 
 
மொத்தத்தில் இயக்குனர் வில்லனை வதம் செய்வதற்கு பதில் ஆடியன்ஸ்களை வதம் செய்துவிட்டார்.
 
ரேட்டிங்: 1.5/5