பரபரப்பான திகில் படம், 'யூகன்'

Annakannan| Last Modified வெள்ளி, 20 ஜூன் 2014 (13:55 IST)
அறிமுக இயக்குநர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பரபரப்பான திகில் படம், யூகன். 
 
படத்தொகுப்பாளராகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய இயக்குநர் கமல், உ, ஒன்னும் புரியல போன்ற படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 
 
மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் கணிப்பொறிக் காட்சிகளை நம்பாமல் ஒப்பனை மூலமே திகில் படுத்தும் விதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. 
இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி ஆறுமுகம், பிரபல ஒளிப்பதிவாளரான சக்தியிடம் பணியாற்றியவர். 
 
கிட்டத்தட்ட ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் இப்படம் தமிழ் திரையுலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துமென இயக்குநர் கமல் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :