வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2016 (14:14 IST)

தீபாவளி படங்கள்: ஒரு பார்வை!!

தீபாவளி ரீலீஸாக மொத்தம் நான்கு படங்கள் வருகிறது. அவற்றில் காஷ்மோரா, கொடி என இரு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இடையே திரைக்கு வராத கதை, கடலை என இரு சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருகிறது.


 
 
நான்கு படங்களில் அதிக எதிர்பார்ப்பு, காஷ்மோரா படத்துக்கு உருவாகியுள்ளது. கொடிக்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைத்து வருகிறது.
 
காஷ்மோரா:
 
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் நடிப்பில் உருவாகியுள்ள காஷ்மோராவை கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
யுத்த சரித்திரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த கலவையாக வரயிருக்கிறது. இதில் கார்த்திக்கு இரட்டை வேடங்கள். டிரைலர், டீசர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
கிட்டத்தட்ட 2 மணிநேரம் 11 நிமிடம் ஓடக்கூடிய இப்படம் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. 
 
கொடி:
 
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயகத்தில், வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையில், தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேசவ்ரன், எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ள படம் கொடி.
 
முதன் முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அரசியல் திரில்லர் படமாக, அணு உலை குறித்த பிரச்சனையை முன்வைத்து உருவாகியுள்ளது இப்படம்.
 
தனுஷ், அரசியல், குடும்பம், காதல், பொதுவாழ்வு என மாறுபட்ட பரிமாணங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 'கொடி' பறக்குதா டிரைலர், டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
வெளியாகப் போகும் நான்கு படங்களில் காஸ்மோரவுக்கும், கொடிக்கும் பலத்த போட்டியும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.