வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2016 (14:00 IST)

இளையராஜாவின் கம்போஸிங்கை பார்த்து கண்கலங்கி உறைந்துபோன இசைக்குழு

இளையராஜாவின் இசைக்கோர்ப்பை வாசித்த பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் இசைக்க்குழுவில் உள்ள கலைஞர்கள் கண்கலங்கி உறைந்துபோன நெகிழ்வான சம்பவம் முன்னர் அரங்கேறியது.
 

 
புகழ் பெற்ற ஆர்.டி. பர்மன் அவர்களின் இசைக்கூடம். அவரது இசைக்கலைஞர்கள் தயாரா இருக்கிறார்கள். எல்லோரிடமும் தான் எழுதிய இசைக்குறிப்புகளை கொடுக்கிறார். நமட்டு சிரிப்புடன் பெற்று கொள்கிறார்கள் எல்லோரும்.
 
அவரவர் தங்களது ஹெட்ஃபோனை மாட்டி கொள்கிறார்கள். என்ன வாசிக்க போகிறோம் என்பது அங்கே யாருக்கும் தெரியாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் எத்தனையாவது நொடியில் எந்த இசைக்கருவியில் என்ன சப்தம் எப்படி கொடுக்கவேண்டும் என்பது மட்டும் தான்.
 
ஒவ்வொருவரும் அதே போல அந்தந்த நொடியில் அந்தந்த இசை துணுக்கை மட்டும் வாசிக்கிறார்கள். ஒவ்வொருவர் செவியிலும் அவர்களது ஹெட்ஃபோன் வழி பிரவாகிக்கிறது இசை.
 
முதல் பிரிலூடு முடிந்ததும் அனைவரும் சட்டென இசைப்பதை நிறுத்திவிட்டு எழுந்து நின்று பலமாக கைதட்டி, தலைதாழ்த்தி வணங்கி பின் மீண்டும் முதலிலிருந்து வாசிக்க தொடங்குகிறார்கள்.
 
அதே பிரிலூடு பிரவாகம் மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறது. பிரிலூடு முடிந்த இடத்தில் நம் எஸ்.பி.பி தொடங்குகிறார் “சுந்தரி... கண்ணால் ஒரு சேதி...”
 
பாடல் பதிவு முடிந்தவுடன் அனைத்து இசை கலைஞர்களும் கண்கலங்க இசைக்கடவுளை பார்த்து உறைந்துபோய் நின்றார்கள். இதுதான் இசைஞானி இளையராஜா.

அந்த பாடல் இதோ: