வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2015 (11:15 IST)

பங்குச் சந்தை சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரிப்பு

பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரித்தது. 


 

 
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது.
 
இந்நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தை அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பு பாதிக்காது என்ற அறிவிப்பு காரணமாக பங்கு சந்தை ஏற்றம் காணத் தொடங்கியது.
 
உலோகத் துறை பங்குகளை முதலீட்டு நிறுவனப் பங்குகளின் விலை 2.46 சதவீதம் உயர்ந்தது. அதிகபட்சமாக, டாடா ஸ்டீல் நிறுவனப் பங்கின் விலை 4.76 சதவீதம் அதிகரித்தது. 
 
தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தில், நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 7,844 புள்ளிகளாக நிலைத்தது.
 
மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரித்து 25,803 புள்ளிகளாக நிலைபெற்றது.