இன்றைய பங்குச் சந்தையில் சற்று வீழ்ச்சி


Ashok| Last Updated: செவ்வாய், 5 ஜனவரி 2016 (16:51 IST)
சீன பங்குச் சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சியின் எதிரொலியால் சென்செக்ஸ் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில் நேற்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 537புள்ளிகள் சரிவடைந்து இருந்த நிலையில், இன்று வர்த்தக தொடக்கத்தில்  சென்செக்ஸ் 143புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

 
ஆனால், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 43.01 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 25580.34 புள்ளிகளாக இருக்கிறது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி  6.65 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 7784.65 புள்ளிகளாக உள்ளது.
 
இன்றைய பங்குசந்தை நிலவரப்படி, ரியல் எஸ்டேட், மின்சாரம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் விப்ரோ, இந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் தவிர்த்து, இதர 27 நிறுவனப் பங்குகளின் விலையும் வீழ்ச்சி கண்டு இருந்தது
 
லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்த காரணத்தால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டடுள்ள நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ. 100 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :