வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Ashok
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2015 (18:23 IST)

பங்குச் சந்தைகள் 4வது நாளாக இன்று ஏற்றத்துடன் முடிவு

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக ஏற்றத்துடன் இன்று மாலை முடிவடைந்துள்ளன. 


 

 
தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 7,844ல் வர்த்தகம் முடிவடைந்தது. மும்பை சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரித்து 25,804ல் வர்த்தகம் இன்று மாலை முடிந்துள்ளது.

2006ஆம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப்படாமல் இருந்த வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) அதிகரித்து பெடரல் வங்கி உத்தரவிட்டுள்ளது.
 
10 ஆண்டுக்கு பின் பூஜ்ஜியத்தில் இருந்து வட்டி விகிதம் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட அமெரி்க்க வட்டி விகித உயர்வு குறைவு என்பதால் சந்தையில் ஏற்றம் அடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளில் ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளின் விலை உயர்ந்துள்ளன. மேலும், டாடா ஸ்டீல், ஹண்டால்கோ, உள்ளிட்ட நிறுவன பங்கு விலையும் இன்றைய பங்குச் சந்தையில் ஏற்றம் அடைந்துள்ளன.