வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2019 (12:44 IST)

தங்கம் விலை சரிவு – பவுனுக்கு 112 ரூபாய் குறைவு !

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் 112 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் உற்பத்தியில் முன்னிலையில் இல்லாவிட்டாலும் தங்கத்தை நுகர்வதில் உலகில் 2வது பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. அத்தகைய இந்தியாவில் 2018-ம் ஆண்டு குறைந்துள்ள தங்க இறக்குமதியும, அதிகரித்து வரும் விலையும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இதனால் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்த தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.  ஒரு பவுனுக்கு 112 ரூபாய் குறைந்து 24 ஆயிரத்து 232-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 29-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலைக் குறைவிற்கு சர்வதேச அளவில் டாலர் மதிப்பு மாற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவைகள் காரணமாகக் கூறப்படுகின்றன.