வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Murugan
Last Updated : புதன், 16 டிசம்பர் 2015 (18:40 IST)

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஐபோன் 7

ஐபோன்7 - ஆப்பிள் போன் அறிமுகம்

செல்போன் சந்தையில், அவ்வப்போது புதிய போன்களை அறிமுகப்படுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7ஐ அறிமுகப்படுத்த உள்ளது.


 

 
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில்தான் ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் பிளஸ் என்ற மாடல்களை அறிமுகப்படுத்தியது. அந்த இரண்டு போன்களுமே விற்பனையில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐபோன் 7 அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த போன் தண்ணீரில் விழுந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதாவது வாட்டர் ப்ரூப் வசதியுடன் வருகிறது. 
 
அந்த வசதி புகை, தூசி போன்றவற்றிலிருந்து இந்த போனை பாதுகாக்கிறது. இந்த ஐ போன் 7 ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் வர இருக்கிறது.