1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By ஈஷா காட்டுப்பூ
Last Modified: திங்கள், 9 பிப்ரவரி 2015 (09:07 IST)

கட்டி காளான்

தேவையான பொருட்கள்:
 
மஞ்சள் பூசனிக்காய் - 1 துண்டு
வேகவைத்த தட்டை பயிறு - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
மிளகாய் தூள் –  1 ஸ்பூன்
சீரகத் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
மஞ்சள் பூசனிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர்  தேங்காய், மிளகாய் தூள்,
சீரகத் தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து அரைக்கவும். 
 
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அதில் பூசனிக்காய் சேர்த்து வதக்கி, அதில் அரைத்த தேங்காய், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் வற்றியவுடன் அதில் வேகவைத்த தட்டைப் பயரையும் சேர்த்து கிளறி இறக்கவிட வேண்டும். கட்டி காளான் தயார்.