1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 23 ஜனவரி 2015 (13:10 IST)

வாங்க ருசிக்கலாம் சா‌க்லே‌ட் கே‌க்

தேவையானப் பொருட்கள்
 
மைதா - 2 கப்
ச‌ர்‌க்கரை - 2 கப்
முட்டை - 8
வெ‌ண்ணை - 450 கிராம்
வென்னிலா பவுடர் - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
கருப்பு டேப்லெட் சாக்லேட் - 400 கிராம்
 
செ‌ய்முறை
 
முதலில் ச‌ர்‌க்கரையை ‌மி‌க்‌‌ஸி‌யி‌ல் போ‌ட்டு தூளாக அரை‌த்து‌க் கொ‌ள்ள வேண்டும். பின்னர் ச‌ர்‌க்கரையை வெ‌ண்ணையுட‌ன் ந‌‌ன்கு ‌க்‌ரீ‌ம் போல வரு‌ம்வரை கல‌க்கவு‌ம். சாக்லேட்டு துண்டுகளை சுடு ‌நீ‌ரி‌ல் போ‌‌ட்டு ந‌ன்கு ‌கூ‌‌ழ் போல செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.
 
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு ‌சி‌ட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கவும். கலக்கிய முட்டை‌யி‌ல், வெ‌‌ண்ணை, ச‌ர்‌க்கரை கலவையை கொ‌ட்டி நன்கு கலக்கவும்.
 
அதில் பேக்கிங் பவுடர், வென்னிலா பவுடர் சேர்த்து மேலும் கலக்கவும். சா‌க்கலே‌ட் கூ‌ழை முட்டை, ச‌ர்‌க்கரை, வெ‌ண்ணை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடி‌த்து‌க் கலக்கவும். பி‌ன்ன‌ர் கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக மைதாவை சேர்த்து ந‌‌ன்கு கலக்கவும். 
 
ஒரு வா‌ய் அக‌ன்ற பா‌த்‌திர‌த்‌தி‌ல் வ‌ெ‌ண்ணை தட‌வி அ‌தில‌் இ‌ந்த மாவு, மு‌ட்டை கலவையை‌க் கொ‌ட்டவு‌ம். வே‌ண்டுமெ‌ன்றா‌ல் அத‌ன் ‌மீது மு‌ந்‌தி‌ரி அ‌ல்லது பாதா‌ம் துருவ‌ல்களை‌த் தூ‌‌வி அல‌ங்க‌ரி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
 
கே‌க்கை ந‌ன்கு வேக வைக்கவும். சுமார் 35 நிமிடங்கள் வேகவிடவும். கேக் வெந்தவுடன் உ‌ங்களு‌க்கு‌த் தேவையான அளவுக‌ளி‌ல் வெ‌ட்டி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். செய்து அச‌த்து‌ங்க‌ள்....