என்னது புல்வாமா தாக்குதல் நடத்தியது பிரதமர் மோடியா? உளறிய பிரேமலதா...

VM| Last Modified வெள்ளி, 29 மார்ச் 2019 (08:48 IST)
கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் நடத்திய பிரதமர் மோடி தான் என பிரேமலதா விஜயகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எதிராக காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தற்கொலைப்படை கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தின்ர். இந்த கொடூர தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். 
 
பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயிற்சியுடன் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி இந்திய விமான படை அழித்தது. 
 
இந்நிலையில் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக மோடி தாக்குதல் நடத்தியதை குறிப்பிடுவதற்கு பதிலாக,  புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடி தான் என வாய் தவறி கூறினார். கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசி உடன் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 


இதில் மேலும் படிக்கவும் :