வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (10:49 IST)

மோடியே தொடரவேண்டும் -பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாலிவுட் கலைஞர்கள்

நடைபெற்று வரும் மோடி அரசே இன்னும் 5 ஆண்டுகளுக்கு தொடரவேண்டும் என பாலிவுட் கலைஞர்கள் 900 பேர்  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவின் ஆட்சியில் கொல்லப்பட்ட கலைஞர்கள் மற்றும் பாஜக முன்னெடுக்கும் பசு காவலர்கள் அரசியல் போன்றவை பொதுமக்கள் மற்றும் சிறுபான்மையினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இந்திய அளவில் உள்ள கலைஞர்கள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இயக்குனர் வெற்றிமாறன்,ரஞ்சித், கோபி நயினார், சனல் குமார் சசிதரன் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி உள்ளிட்ட 800 பேருக்கு மேல் கையெழுத்திட்டனர்.

இந்த இயக்கம் இந்தியா முழுமைக்கும் பரவலாகப் பரவ ஆரம்பித்தபோது மோடிக்கு ஆதரவாக பாலிவுட் கலைஞர்களும் இப்போது களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் மோடிக்கு ஆதரவாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் விவேக் ஓபராய், ஷங்கர் மகாதேவன், கொய்னே மிட்ரா, பாயல் ரோஹட்கி, ராகுல் ராய், அலோக் நாத் உள்ளிட்ட பாலிவுட்டை சேர்ந்த 907 கலைஞர்கள் மோடி அரசுக்கு ஆதரவாக கையிழுத்திட்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் ’ கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் இல்லாத ஆட்சி மற்றும் பாதுகாப்பில் உறுதி நடந்து வருகிறது. இதனால் இந்தியா உலகளவில் நல்ல மரியாதையைப் பெற்றுள்ளது. எனவே நம் முன் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள நமக்கு வேண்டியது வலிமையான அரசே. எனவே இப்போது இருக்கும் மோடியின் அரசே தொடரவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.