பயங்கரவாதம் என்றால் என்ன? - நாம் சாம்ஸ்க்கி

Webdunia|

இரண்டு விதமான நிலைகளைக் குறித்து நான் ஊகம் செய்யப் போகிறேன். முதலாவது ஊகம் என்னவென்றால் செப்டம்பர் 11 தாக்குதல் அச்சமூட்டுகிற கொடுஞ்செயல் மட்டுமல்லாமல் வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய நிகழ்வு. மனித உயிர்களை உடனடியாக பலிகொண்ட குற்றம். இரண்டாவதாக ஊகம் நமக்கெதிரானதாகவோ அல்லது பிறருக்கெதிரானதாகவோ இருக்கும்போது கூட இதுபோன்ற குற்றங்களைக் குறைப்பதே நமது குறிக்ககோளாக உள்ளது என்கிற ஊகம். இந்த இரண்டு ஊகங்களையும் நீங்கள் ஒத்துக்கொள்ளவிட்டால் நான் உங்களிடம் ஏதும் பகிர்ந்து கொள்ள முடியாது. இந்த நிலைகளை ஒத்துக்கொள்ளும்பட்சத்தில் நமது மனதில் பல கேள்விகள் எழுகின்றன.

முக்கியமானதொரு கேள்வி இப்போது சரியாக என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றன? இந்நிகழ்வுகளில் நமக்கு குறிப்பால் உணர்த்தும் ஏதேனும் உள்ளதா? அவை குறித்து நாம் என்ன செய்ய முடியும்?

செப்டம்பர் 11 அன்று என்ன நடந்ததோ அது வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வரலாற்று நிகழ்வு என்கிற பரவலான கருத்து தொடர்பானது இரண்டாவது கேள்வி இந்த கருத்து உண்மையானது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதனை வரலாற்று நிகழ்வு என்று சொல்வதைத் தொடர்ந்து ஒரு கேள்வி, எவ்வாறு சரியாக அதுவொரு வரலாற்று நிகழ்வாகிறது? மூன்றாவது கேள்வி பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பற்றியது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றால் என்ன? அது சரியாக எதைத் தெரிவிக்கிறது. இதோடு தொடர்புடைய மற்றொரு கேள்வி பயங்கரவாதம் என்றால் என்ன? நான்காவதாக கூர்மையானதும் முக்கியமானதுமான கேள்வி செப்டம்பர் 11ல் நடந்த குற்றங்களின் தோற்றுவாய் என்ன? என்பது. ஐந்தாவதாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கப்போகிறோம்? எவ்வாறு சூழ்நிலையை சமாளிக்கப்போகிறோம், எதிர்கொள்ளப் போகிறோம்?
1. தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?

"முப்பது முதல் நாற்பது லட்சம் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்" ஆப்கானிஸ்தானிலுள்ள சூழ்நிலையை பற்றி சொல்கிறேன். செப்டம்பர் 11-க்கு முன்பு 70 முதல் 80 லட்சம் மக்கள் பட்டினியின் விளிம்பிலிருந்ததாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. அவர்கள் பன்னாடடு உதவியுடன் உயிர்ப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். செப்டம்பர் 16-ம் தேதி, ஆப்கானிஸ்தான் பொது மக்ளுக்கு, உணவு மற்றும் அன்றாடத் தேவைப் பொருட்களை அளித்து வந்த சரக்கு வண்டிகளின் போக்குவரத்தை நிறுத்தி விடுமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது என்கிறது "தி டைம்ஸ்". எனது அறிவுக்கு எட்டியவரை அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ இப்படி லட்சக்கணக்கான மக்கள் மீது பட்டினியைத் திணிக்கிற போக்கை எதிர்த்து எவ்விதமான எதிர்வினையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அதே வேளையில் அமெரிக்க ராணுவத் தாக்குதல் பற்றிய அச்சம் பன்னாட்டு உதவிக்குழுக்களை வெளியேற வைத்துள்ளது. அதனால் பசிமீட்புப் பணிகள் மேலும் ஊனமடைந்துள்ளன.
மூன்று வாரங்களுக்கு பிறகு அக்டோபர் முதல் வாரத்தில் "உலக உணவுத் திட்டம்" என்கிற பன்னாட்டு அவைத் திட்டம் தனது சேவையைத் துவக்கியுள்ளது. அவர்களிடம் மிகக் குறைந்த அளவில்தான் உணவு பொருட்கள் உள்ளன. அவர்களிடம் பன்னாட்டு உதவியாளர்களும் இல்லை. எனவே அவர்களின் உணவு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

ஏவுகணைத் தாக்குதல் நடந்த முதல்வாரத்தில் "தி நியூயார்க் டைம்ஸ்" கடைசிப் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், பன்னாட்டு அவையின் கணக்குப்படி ஒரு துண்டு ரொட்டிக்காக அவதிப்படுகிற ஆப்கானியர்களின் எண்ணிக்கை எழுபத்தைந்து லட்சமாக ஆகிவிடும் என்றும் வரப்போகின்ற குளிர்காலத்தில் பல பகுதிகளுக்குச் சென்று உணவு விநியோகிப்பது தடைபட்டுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. குண்டு மழை பொழிந்து கொண்டிருப்பதால் விநியோக விகிதம் தேவைப்படுவதில் பாதி அளவே நடக்கிறது. மேற்கத்திய நாகரிகம் முப்பது முதல் நாற்பது லட்சம் மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. குறிப்பிட்ட அதே நாளில் மேற்கத்திய நாகரிகத்தின் தலைவர் (ஜார்ஜ் புஷ்) குற்றம் சாட்டப்பட்டுள்ள பின்லேடனை ஒப்படைப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கிறார். பின்லேடனை ஒட்டுமொத்த சரண் அடையச் சொல்வதற்கான காரணங்களின் வாய்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற வேண்டுகோள்களையும் வெறுப்புடன் ஒதுக்கித் தள்ளிவிடுகிறார். அதே நாளில்தான், பன்னாட்டு அவையின் உணவுப்பொருள் உதவிக்கான சிறப்புத் தொடர்பாளர், குண்டு வீசுதலை நிறுத்தி மில்லியன்கணக்காக அப்பாவி மக்களை மீட்க உதவுங்கள் என்று அமெரிக்காவிடம் மன்றாடினார். அது செய்தி ஆகவில்லை.
இவற்றை கவனித்துப் பார்த்தால் ஒருவிதமான, மௌன இனப்படுகொலை நடப்பது போல் தோன்றுகிறது. நாம் பங்கு வகிக்கிற இந்த மேட்டிமைக் கலாச்சாரத்தின் உள்நோக்கத்தை பற்றி தெரிவிக்கிறது. அடுத்த சில மாதங்களில் பல லட்சம் மக்களைப் படுகொலை செய்வதற்கானத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தவிருப்பதின் அறிகுறியாக இதனை அனுமானிக்கலாம். ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பதில் பெரும்பகுதி நம்முடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நடந்து கொண்டிருப்பவற்றைப் பாதிக்கின்ற வகையில் நம்மால் செயல்பட முடியும்.


இதில் மேலும் படிக்கவும் :