இந்தியாவினுடைய அரசியலமைப்புச் சட்டம் என்று சொல்லக்கூடியது பெயரளவிற்கு கூட்டாட்சி முறை என்று சொல்லிக்கொண்டாலும் கூட உண்மையில் கூட்டாட்சி முறை அல்ல. அது யூனிட்டரி யூனியனாகத்தான் இருக்கிறது. அப்படியென்றால் இந்தியாவில் நிலவக்கூடியது மைய அரசு மட்டும்தான். மாநில அரசுகள் என்று சொல்லக்கூடியது மைய அரசின் துணை உறுப்புகளே அன்றி தனி அரசு அல்ல. State என்ற பெயர் பொய்யான வார்த்தை.