"பொன்னியின் செல்வன்" படத்தின் டைட்டில் லோகோ ரிலீஸ்!

papiksha| Last Updated: வியாழன், 2 ஜனவரி 2020 (17:33 IST)
மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படம் பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிக்கும் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதனாலே சினிமா பிரியர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
 
கல்கி நாவலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில்  ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் காட்சிகளைப் படமாக்கி வந்தார் மணிரத்னம். தாய்லந்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 
 
நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  'பொன்னியின் செல்வன்' படத்தின் லோகோவை நாளை வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் வீர வாள் கொண்ட இப்படத்தின் டைட்டில் லோகோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :