வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (19:47 IST)

மணக்கும் காமெடியின் கணக்கு தான் என்ன?

மணக்கும் காமெடியின் கணக்கு தான் என்ன என்று புரியாமல் குழம்பி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.


 
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி, முன்னணி காமெடியனாக வளர்ந்தவர் மணக்கும் காமெடி. அவருக்கும் ஹீரோ ஆசை வர, சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், முதல் இரண்டு படங்கள் தோல்வியைத் தழுவ, மூன்றாவதாக வெளியான பேய்ப்படம் மட்டும் வெற்றிப்படமாக அமைந்தது.
 
தற்போது நான்கு படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் மணக்கும் காமெடி. இதில் இரண்டு படங்கள் எப்போது தயாராகி, ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்து வருகின்றன. இன்னும் இரண்டு படங்களை நினைத்த நேரத்தில் எடுப்பதால், ஷூட்டிங் முடியாமல் பாதியிலேயே நிற்கிறது. 
 
இந்நிலையில், இன்னொரு படத்தில் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மணக்கும் காமெடி. அடுத்த மாதம் தொடங்க இருக்கும் இந்தப் படத்தை, காமெடிப் படங்களாக எடுத்துவரும் இயக்குநர் இயக்குகிறார். அவர் இயக்கிய படங்களில் பிரதான காமெடியனாக நடித்த மணக்கும் காமெடி, இப்போது ஹீரோவாக நடிக்கப் போகிறார். இதனால், மணக்கும் காமெடியின் கணக்கு தான் என்ன என்று புரியாமல் தயாரிப்பாளர்கள் குழம்பி வருகின்றனர்.