Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தளபதியுடன் மீண்டும் இணையும் நம்பர் நடிகை?

Cauveri Manickam| Last Updated: செவ்வாய், 16 மே 2017 (15:08 IST)
தளபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாராம் பெரிய நம்பர் நடிகை.

 
டான்ஸ் புயல் இயக்கிய படத்தில், தளபதிக்கு ஜோடியாக நடித்தார் பெரிய நம்பர் நடிகை. தற்போது, டாப் நடிகையாகி விட்டதாலும், 13 வருடங்களுக்கு மேல் ஃபீல்டில் நிலைத்திருப்பதாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன் என்கிறார். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தால், என் திறமையை எப்படிக் காட்டுவது என்று  டயலாக் பேசிவந்தார்.
 
ஆனால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் படமே, முதலுக்கு மோசம் வைத்தது. இதனால், அடுத்த படத்தை வாங்கவும் ஆளில்லை. டாப்பில் இருந்த நடிகை, ஒரே படத்தில் தரைக்கு வந்துவிட்டார். மறுபடியும்  டாப்புக்குப் போவதென்றால், தளபதி அல்லது தலயுடன் நடித்தால் தான் முடியும் என்று நினைக்கிறாராம். தலயின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்று தெரியாததால், தளபதியை இயக்கப்போகும் இரண்டெழுத்து இனிஷியல் இயக்குநரிடம்  வாய்ப்பு கேட்டுள்ளாராம். இயக்குநரும் ஓகே சொல்லும் முடிவில் இருக்கிறார் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :