Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தளபதி படத்தைத் தயாரிக்கும் சூரிய நிறுவனம்?

Cauveri Manickam| Last Modified புதன், 17 மே 2017 (17:20 IST)
இளம் இயக்குநரின் பெயரிடப்படாத படத்தில் தற்போது நடித்து வருகிறார் தளபதி. மூன்று கேரக்டர்களில் நடிக்கும் தளபதிக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படம் முடிந்ததும், தன்னை வைத்து அடுத்தடுத்து இரண்டு ஹிட் கொடுத்த இரண்டெழுத்து இனிஷியல் இயக்குநருடன் மறுபடியும் இணைகிறார் தளபதி.

 
இந்தப் படத்தை, இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் தயாரிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போதைய எதிர்க்கட்சியின்  உறவு நிறுவனமான சூரிய நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்கிறார்கள். உச்ச நட்சத்திரம் நடித்த ஒரு படத்தை மட்டுமே தயாரித்துள்ள இந்நிறுவனம், பல படங்களை வாங்கி விநியோகம் செய்துள்ளது. அரசியல் சூழல் காரணமாக ஒதுங்கியிருந்த  நிறுவனம், மறுபடியும் உதிக்கத் திட்டமிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :