வைகைப் புயலைக் கழுவி ஊற்றும் காமெடி நடிகர்!!


Cauveri Manickam (Suga)| Last Updated: சனி, 23 செப்டம்பர் 2017 (19:46 IST)
வைகைப் புயல் நடிகரைப் பற்றி கழுவிக் கழுவி ஊற்றி வருகிறார் இன்னொரு காமெடி நடிகர்.

 
 
வைகைப் புயலுடன் பல காமெடி காட்சிகளில் சேர்ந்து நடித்தவர் தாடி காமெடி நடிகர். சின்னத்திரை ஒன்றில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், பின்னாளில் வேறொரு நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்தார். சமீபத்தில் கூட இவர் மீது இவருடைய மனைவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
 
வைகைப் புயலுக்குப் பயம் வந்துவிட்டது என இந்த தாடி காமெடி நடிகர் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் ஒரு காட்சியில் நடித்ததும், அடுத்த காட்சிக்கு நேரடியாகப் போய்விடுவாராம் வைகைப் புயல். 
 
ஆனால், இப்போதெல்லாம் ஒரு ஷாட் முடிந்ததும், அங்குள்ளவர்களிடம் கருத்து கேட்கிறாராம். தன் காமெடி ஒர்க் அவுட் ஆகுமா? இல்லையா? என வைகைப் புயலுக்குப் பயம் வந்ததால்தான் இப்படி கருத்து கேட்கிறார் எனத் தெரிவித்துள்ளார் தாடி காமெடி நடிகர்.


இதில் மேலும் படிக்கவும் :