தனிக்கட்சி தொடங்கும் உச்ச நட்சத்திரம்?


cauveri manickam| Last Modified வெள்ளி, 19 மே 2017 (15:13 IST)
கடந்த 5 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்து முடித்திருக்கும் உச்ச நட்சத்திரம், விரைவில் தனிக்கட்சி தொடங்கும் வாய்ப்பிருப்பதாக அவருடைய நண்பர் தெரிவித்துள்ளார்.

 

8 வருடங்களுக்குப் பிறகு கடந்த 15ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரசிகர்களைச் சந்தித்தார் உச்ச நட்சத்திரம். கடைசி நாளான இன்று, ‘நான் பச்சைத் தமிழன்’, ‘போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்’, ‘எதிர்ப்புதான் அரசியலின் மூலதனம்’ என அரசியல் சம்பந்தப்பட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தார்.  உச்ச நட்சத்திரம் கண்டக்டராக இருந்தபோது, டிரைவராக இருந்தவர் அவர். இன்னும் உச்ச நட்சத்திரத்தின் நெருங்கிய நண்பராக இருக்கும் அவரிடம் இதுகுறித்துக் கேட்டால், ‘கடந்த 8ஆம் தேதி பெங்களூரு வந்திருந்தபோது அவரைச் சந்தித்தேன். தமிழக அரசியல் பற்றி ரொம்பவே கவலைப்பட்டார். ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் என்றும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் சொன்னார்.

‘நான் அரசியலுக்கு வருவது பற்றி நீ என்ன நினைக்குற?’ என்று என்னிடம் கேட்டார். ‘நான் என்ன நினைப்பது? எல்லோரும் நீங்கள் வரவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்’ எனப் பதிலளித்தேன். நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார். அப்படி வரும்போது தனிக்கட்சி தொடங்குவாரே தவிர, பிற கட்சிகளில் இணைய மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார் அந்த நண்பர்.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :