Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இப்போதாவது அந்த ஒரு கோடியைக் கொடுப்பாரா உச்ச நட்சத்திரம்?


cauveri manickam| Last Modified திங்கள், 19 ஜூன் 2017 (14:57 IST)
அறிவித்து சிலபல வருடங்கள் ஆகியும், இப்போதாவது அந்த ஒரு கோடியைக் கொடுப்பாரா உச்ச நட்சத்திரம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

சிலபல வருடங்களுக்கு முன்னால், நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. அந்த சமயத்தில், நதிகளை இணைக்க தான் ஒரு கோடி தருவதாக ஒப்புக் கொண்டார் உச்ச நட்சத்திரம். ஆனால், இதுவரை அவர் ஒரு கோடியைக் கொடுக்கவும் இல்லை, நதிகளையும் இணைத்தபாடில்லை.

இந்நிலையில், விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தி வரும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர், நேற்று உச்ச நட்சத்திரத்தை அவர் வீட்டில் சந்தித்துப் பேசினார். ‘விவசாயிகளுக்கு ஆதரவாக உச்ச நட்சத்திரம் குரல் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார். அத்துடன், அப்போது தருவதாகச் சொன்ன அந்த ஒரு கோடியையும் பிரதமரிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். செய்வாரா உச்ச நட்சத்திரம்?


இதில் மேலும் படிக்கவும் :