Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹீரோவால் தள்ளிப்போகும் பிரம்மாண்ட படம்...


Cauveri Manickam (Suga)|
ஹீரோ வேறு சில படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதால், பிரமாண்ட படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போகிறதாம்.

 
 
உலகமே வியந்த ‘பாகுபலி’யைப் பார்த்து, தானும் அதுமாதிரி ஒரு படத்தை இயக்கப் போகிறேன் என களத்தில் குதித்தார் நகைச்சுவைக்குப் பெயர்போன சுந்தரமான இயக்குநர். ஆனால், படத்தில் இருந்து ஹீரோயின் விலக, அடுத்த ஹீரோயினைத் தேடுவதற்குள் நிறைய நேரம் வீணாகிவிட்டது.
 
ஒருவழியாக ஹீரோயினை கமிட் செய்துவிட்டனர். ஆனால், படம் எப்போது தொடங்கும் எனத் தெரியாததால், வேறு சில படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டாராம் ஜெயமான ஹீரோ. 
 
அந்தப் படங்களின் ஷூட்டிங் அடுத்த வருடத்தில்தான் முடியும் என்பதால், பிரமாண்ட படத்தை அப்போதுதான் தொடங்க முடியும். எனவேதான் ஏற்கெனவே தான் இயக்கிய நகைச்சுவைப் படத்தின் இரண்டாம் பாகத்தைக் கையில் எடுத்துள்ளாராம் இயக்குநர்.


இதில் மேலும் படிக்கவும் :