மறுபடியும் காமெடி அவதாரம்… நண்பர்களுக்கு தூதுவிட்ட சாண்டல்


cauveri manickam| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (12:38 IST)
ஹீரோவாக நடித்த படம் ரிலீஸ் ஆக முடியாமல் தவிப்பதால், மறுபடியும் காமெடியனாகவே நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் சாண்டல்.

 

 
போட்டிக்கு யாருமில்லாமல், தனி காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சாண்டல். அதிகாலை முதல் மதியம் வரை ஒரு படத்திற்கும், மதியம் முதல் இரவு வரை இன்னொரு படத்திற்கும் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் அளவுக்கு பிஸியோ பிஸியாக இருந்தார். ஒரு கால்ஷீட்டிற்கு 5 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார்.

ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை. காமெடியனாக இருந்தவருக்கு ஹீரோ ஆசை வர, நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களுமே சுமார் ரகம்தான். அவர் நடிப்பில் உருவாக்கியிருக்கும் நாகேஷ் படத்தின் பெயரைக் கொண்ட படம், ரிலீஸ் ஆக முடியாமல் தவித்து வருகிறது. இத்தனைக்கும் அவர் படம் ரிலீஸாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது.

இதனால், அவர் அடுத்தடுத்து நடித்துவரும் இரண்டு படங்களும் பாதியிலேயே நிற்கின்றன. இதனால், மறுபடியும் காமெடியனாகவே நடிக்கும் முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் தன் நண்பர்களுக்குத் தூதுவிட்டிருக்கிறாராம் சாண்டல்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :