வம்பு நடிகரை வச்சு செய்யச்சொல்லி காசு கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

cauveri manickam| Last Modified வெள்ளி, 16 ஜூன் 2017 (18:41 IST)
வம்பு நடிகரை கலாய்த்து எழுதச் சொல்லி காசு கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
பிட்டு படம் எடுத்த இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார் வம்பு நடிகர். பெயரிலேயே மூன்று ‘ஏ’ இருக்கும் அந்தப் படம், வருகிற ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆவதாக அறிவித்தனர். எனவே, படப்பிடிப்பு சமயத்தில் ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்த வம்பு நடிகரை கலாய்த்து எழுதச்சொல்லி, ட்விட்டர் புரமோஷன் செய்யும் ஆட்களைக் கூப்பிட்டு அனுப்பி காசு கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இதைத் தெரிந்துகொண்ட வம்பு நடிகர், படத்தின் புரமோஷனுக்கு வரமாட்டேன் என்றாராம். ‘படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. ‘நீ வந்தா வா, வராட்டி போ…’ என்கிற ரீதியில் வம்பு நடிகருக்கே சவால் விட்டிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியாததால், ரம்ஜானுக்கு படம் ரிலீஸ் ஆவது கஷ்டம் என்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :