அதிமுக அமைச்சர் காலில் விழும் டாஸ்க் கொடுத்தால் செய்வீர்களா கமல்? ஓவியா ரசிகர் கேள்வி

oviya kamal" width="600" />
sivalingam| Last Modified சனி, 29 ஜூலை 2017 (06:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ஏற்பட்டுள்ள புகழ் காரணமாக சம்பந்தப்பட்ட டிவிக்கே பொறாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ஒருவரை அங்கிருக்கும் பங்கேற்பாளர்களே டார்ச்சர் செய்வார்கள். ஆனால் இப்போது ஓவியாவை பங்கேற்பாளர்கள் டார்ச்சர் செய்தால் எடுபடாது என்பதால் சேனலே டார்ச்சர் செய்கிறது.


 
 
இதனால் கொதித்தெழுந்துள்ள ஓவியாவின் புரட்சிப்படை, ஓவியா ஆர்மி, சேனலுக்கும், கமலுக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை டுவிட்டரில் எழுப்பி வருகின்றனர்.
 
ஜூலிக்கு ஓவியாவுக்கும் ஆகாது என்று தெரிந்தும் ஜூலிக்கு ரெட் கார்ப்பெட் விரிக்கும் டாஸ்க் கொடுக்கலாமா? மேலும் ஜூலிக்கு பணிவிடை செய்வது, மசாஜ் செய்வது, சமையல் செய்து போடுவது ஆகியவையும் இந்த டாஸ்க்கில் இருக்கின்றது. ஆனால் அதை எதையுமே காட்டாமல் ஓவியாவை மட்டுமே டார்ச்சர் செய்து வருகின்றனர்.
 
அமைச்சரின் காலில் விழும் டாஸ்க் ஒன்றை கமலுக்கு கொடுத்தால் அவர் அதை எத்தனை கோடி கொடுத்தாலும் செய்வாரா? ஏன் இப்படி ஒரு தனி மனிதரின் சுய கெளரவத்தை பாதிக்கும் அளவுக்கு டாஸ்க் கொடுக்கின்றீர்கள் என்று கமலுக்கு ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :