Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பேருதான் ஃபாரீன்… ஆனா, பாரதிதாசன் யூனிவர்சிட்டி கோர்ஸ் தான்…

Cauveri Manickam| Last Modified புதன், 17 மே 2017 (17:51 IST)
தமிழ் சினிமாவின் நிறத்தை மட்டுமல்ல, நிறம் குறைந்த நடிகர்களையே ஹீரோ – ஹீரோயினாக்கி அழகு பார்த்தவர் இந்த  இயக்குநர். ‘எ ஃபிலிம் பை’ இவர் பெயருக்கு முன்னால் வருவதுதான் சாலப் பொருத்தம். இவர் அறிமுகப்படுத்திய பலர், இன்றைக்கு சினிமா உலகின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
 
 
தற்போது நடிகர் அவதாரமும் எடுத்திருக்கும் இந்த கிராமத்துக் குயில், படங்களையும் இயக்கி வருகிறது. அத்துடன், தன்  பெயரிலேயே ஒரு திரைப்பட பயிற்சிக் கல்லூரியையும் ஆரம்பித்துள்ளார் இயக்குநர். இயக்கம், திரைக்கதையாக்கம், ஒளிப்பதிவு, இசைக் கோர்ப்பு, நடிப்பு உள்ளிட்ட சினிமா தொடர்பான அத்தனை விஷயங்களும் இங்கு கற்றுத் தரப்படும். சமீபத்தில் தான்  தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரிக்கு, தற்போது அட்மிஷன் ஆரம்பித்துள்ளது. தன்னுடைய பெயருடன் ஃபாரீனையும் இணைத்து  கல்லூரிக்குப் பெயர் வைத்துள்ள இயக்குநர், அப்ரூவல் வாங்கியிருப்பது என்னவோ திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்  கழகத்தில் தான். அப்போ அந்த இண்டர்நேஷனல்? பாரதிதாசன் பல்கலைக் கழகமாக இருந்தாலும், பன்னாட்டு அளவுக்கு  பயிற்சித் தரம் இருக்குமாம்.


இதில் மேலும் படிக்கவும் :