வெளிநாட்டில்தான் கம்போஸிங்… ட்ரெண்ட் தெரியாமல் அடம்பிடித்த இசையமைப்பாளர்


Cauveri Manickam (Abi)| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (17:25 IST)
வெளிநாட்டில் தான் இசையமைப்பேன் என்று அடம்பிடித்து, அதன்படியே கிளம்பியிருக்கிறாராம் ஜெயமான இசையமைப்பாளர்.

 

 
கோலிவுட் இசையமைப்பாளர்களிலேயே அதிகம் காப்பியடிப்பவர் என்ற பெயரைப் பெற்றவர் ஜெயமான இசையமைப்பாளர். சில வருடங்களாக எல்லோரையும் தொற்றியுள்ள ஃபாரீன் கம்போஸிங் ட்ரெண்டில், இவரும் இருக்கிறார். அதாவது, இங்கு உட்கார்ந்து இசையமைத்தால் வராது என்று சொல்லி, தயாரிப்பாளர் செலவின் ஃபாரீன் போய் இசையமைப்பது.
 
ஆனால், தற்போது ட்ரெண்ட் மாறிவருகிறது. இளம் இசையமைப்பாளர்கள் நிறைய பேர் கவனிக்கத்தக்க வகையில் இசையமைத்து வருகின்றனர். அவர்களுடைய சம்பளமும் 20 லகரத்துக்குள் முடிந்துவிடும். இது தெரியாமல், 4 கோடி ரூபாய் சம்பளம், ஃபாரீன் கம்போஸிங் என்று நடனப்புயல் இயக்கும் படத்திற்காக அடம்பிடித்துள்ளார் ஜெயமான இசையமைப்பாளர். வேறு வழியில்லாததால், அவர் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். அடிக்கிற போற காப்பிக்கு இந்த பில்டப்பா?
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :