Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் தகதக நடிகை

cauveri manickam| Last Updated: திங்கள், 19 ஜூன் 2017 (16:10 IST)
வாய்ப்புகளுக்காக, சம்பளத்திலும் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள ரெடியாக இருக்கிறாராம் தகதக நடிகை.

பிரமாண்ட படத்தின் முதல் பாகத்தில், மகனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தகதக நடிகை. அந்தப் படத்தில் அப்பாவுக்கு ஜோடியாக இன்னொரு நடிகை நடித்திருந்தாலும், முதல் பாகத்தில் தகதக நடிகைக்குத்தான் அதிக ஸ்கோப் தரப்பட்டிருந்தது. எனவே, அந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு சம்பளத்தை ஏற்றினார் நடிகை.

ஆனால், சமீபத்தில் வெளிவந்த இரண்டாம் பாகத்தில், சில நிமிடங்களே வந்துபோனார் நடிகை. அத்துடன், முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் கலெக்ஷன் இரண்டு மடங்குக்கு மேல் அதிகம். எனவே, அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். நடிகையும், வருகிற வாய்ப்புகளை விடவேண்டாம் என்று சம்பள விஷயத்தில் அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறாராம். ஆனால், பெரிய ஹீரோவுடன் மட்டும்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.


 


இதில் மேலும் படிக்கவும் :