1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 3 ஜூலை 2014 (12:07 IST)

பினாமி ஏரியாவில் தல புராணம்

ரத்தினமானவர் கடன் சுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அல்டிமேட் தேடிச் சென்று அவரது தயாரிப்பில் படம் நடித்தார். ஒரே படத்தில் கடனையெல்லாம் அடைத்து மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பினார்.
 
இந்நிலையில் உடனடியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கும் வாய்ப்பை அவருக்கே தந்துள்ளார் அல்டிமேட். அதனால் பலருக்கு சந்தேகம். முன்பு அல்டிமேட்டின் படங்களை எம்பரர் தயாரிப்பாளர்தான் தொடர்ந்து தயாரித்து வந்தார். அல்டிமேட் எம்பரரின் சைலண்ட் பார்ட்னர் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். 
 
பிறகு இந்த கூட்டணி உடைந்தது. அதேபோலொரு சைலண்ட் பார்ட்னர்ஷிப்பை ரத்தினமானவருடன் அல்டிமேட் தொடங்கியிருக்கிறார், அதனால்தான் அடுத்தடுத்து அவருக்கு படங்கள் தந்துள்ளார் என கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.
 
உண்மையா பாஸ்?