வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 26 ஜூன் 2014 (11:06 IST)

விழாவுக்கு வர முடியாது, சாவுக்குமா...

புகழும் உயர்வும் வரும் போது பணிவும் வரவேண்டும் அதுவே மனிதர்க்கு அழகு. சாண்டல் காமெடியர் அப்படியே உல்டா. புகழும், பணமும் வருகையில் வந்த பாதையே மறந்துவிடுகிறது.
 
சாண்டல்வுட்டை ஹீரோவாக வைத்து படமெடுக்க ஆசைப்பட்டவர் அதிக படம் இயக்கிய அந்த சாதனை இயக்குனர். சாண்டல் தனி ஹீரோவாக நடிக்க தயங்கியதால் மூன்று ஹீரோக்களில் அவரை ஒரு ஹீரோவாக்கி லட்டு மாதிரி ஒரு படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில் நடிகரை ஒரு தயாரிப்பாளராகவும் சேர்த்து அழகுப் பார்த்தார். அந்த இயக்குனரின் மறைவுக்கு திரையுலகம் திரண்டு அஞ்சலி செலுத்தியது. உள்ளூரில் இருந்தும் சாண்டல் மட்டும் ஆப்சென்ட். 
 
நடிக்கிற படத்தின் விழாவுக்கு வரமாட்டேன் என்று ஒரு பாலிசி வைத்துள்ளார் சாண்டல். அஞ்சலி செலுத்துவதையும் விழா என்று நினைத்துவிட்டாரோ?