வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Geetha Priya
Last Updated : புதன், 25 ஜூன் 2014 (15:14 IST)

போன மச்சான் திரும்பி வந்தான்

புயல் காமெடியின் ரீ என்ட்ரி வெறும் புழுதியை மட்டும் கிளப்பி அடங்கியது. அடுத்து என்ன செய்வது என்று திக்குதிசை தெரியாமல் சொந்த ஊருக்கு சென்று சொகுசாக ஓய்வெடுத்தார். உட்கார்ந்து சாப்பிட பணம் இருந்தாலும் பழைய புகழ் திரும்ப கிடைக்குமா. அதற்கு படம் நடித்தால்தான் ஆயிற்று.

ரீ என்ட்ரிக்கு முன்னால் கதை சொல்ல வந்த இயக்குனர்கள்கூட இப்போது புயலை திரும்பிப் பார்ப்பதில்லை. அதனால் தன்னை ஹீரோவாக்கிய இயக்குனரிடமே திரும்பியுள்ளார். இந்த இடத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக்.
 
புயல் தனது ரீ என்ட்ரியை பிரமாதப்படுத்த தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரிடம்தான் ஸ்கிரிப்ட் தயார் செய்ய சொன்னார். அவரும் ஸ்கிரிப்டை எழுதி இரண்டு வருடங்கள் புயலின் பின்னால் அலைந்தார். கடைசி நேரத்தில் இயக்குனருக்கு கடுக்காய் கொடுத்து வேறொருவரின் இயக்கத்தில் ரீ என்ட்ரியானார் புயல். 
 
இப்போது இயக்குனருக்கு சேனாதிபதியை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் எப்படி புயலை வைத்து படம் பண்ணுவார்? கசப்பான பிளாஷ்பேக் வேறு இருக்கிறது. என்றாலும் இளகிய மனம் கொண்ட அந்த தேவ இயக்குனர் சேனாதிபதி படம் முடிந்ததும் உங்களை வைத்து படம் இயக்குகிறேன் என்று வாக்கு தந்திருக்கிறார்.