Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாடர்னாக மாறும் ‘மம்மி’ நடிகை

Cauveri Manickam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:52 IST)
பாவாடை – தாவணியில் பார்த்தால், பத்து பொருத்தமும் அப்படியே இருக்கும் உலகி அழகி பெயரைக் கொண்ட அந்த நடிகைக்கு. அதனால், அதே மாதிரியாக நடிக்க பல்வேறு அழைப்புகள் வந்தன. அதில், தனக்குப் பொருத்தமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாகவும் நடித்தார்.

 
இப்படியே போய்க் கொண்டிருந்தால், அடுத்த லெவலுக்கு எப்படிப் போவது? அதனால், ஸ்டைலிஷாகவும் நடிக்க வேண்டும்  என்று நினைத்துக் கொண்டிருந்தார். ‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி, ‘சேது’ நடிகரின் படத்தில் இரண்டாவது நாயகியாக்கி விட்டார் ஸ்டைலிஷ் இயக்குநர். 
 
அவர் படத்தில் நடித்தால் மாடர்னாகத்தானே இருக்கும்? அதனால், இனிமேல் வரப்போகிற எல்லா படங்களிலும் மாடர்ன்  கேரக்டரில் மட்டுமே நடிக்கப் போகிறாராம். ‘இந்த சீன்ல நீங்க சேலை கட்டிகிட்டு நடிக்கிறீங்க’ என்று யாராவது கதை சொன்னால், ‘ச்சீய்…’ என்று முகத்தைச் சுளிக்கிறாராம். உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாக முடியுமா? என்று  இவரைப் பார்த்து நக்கல் அடிக்கிறார்கள் சில நடிகைகள்.


இதில் மேலும் படிக்கவும் :