தொடர்ந்து ஒரே நடிகையுடன் நடிக்க விரும்பாத சிவ நடிகர்!

Sasikala| Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2017 (12:22 IST)
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ள இந்த நடிகர் சர்வண்ட் படத்  தலைப்பை கொண்டு நடித்து வருகிறார். அவருக்கு அம்மாவாக நடித்து வருகிறார் ரோகிணி. 

 
சர்வண்ட் படத்தில் நடிப்பதற்கு முதலில் அம்மாவாக நடித்தவரைதான் முடிவு செய்து வைத்திருந்தாராம் இயக்குனர். ஆனால்  இதற்கு அவர் வேண்டாம் என சொல்லிவிட்டாராம் சிவ நடிகர். 
 
அதையடுத்து அம்மா மட்டுமின்றி, காமெடியன், கதாநாயகி என மற்ற வேடங்களில் நடிப்பவர்களும் தொடர்ந்து தன்னுடன் இணைந்து நடிப்பதை விரும்பாத சிவ நடிகர் படத்துக்கு படம் வெவ்வேறு நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டும் என்று  ஆசைபடுகிறாராம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நம்பர் நடிகை நடிப்பதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :